Mobile

சிறப்பான அம்சங்களுடன் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் தற்போது ரெட்மி 10 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது.

ரெட்மி 10 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ IPS LCD ஸ்கிரீன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் என்று கொண்டால் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், ARM மாலி-G52 2EEMC2 GPU கொண்டுள்ளது.

மெமரி என்று கொண்டால் 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி, 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

சிறப்பான அம்சங்களுடன் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் வெளியீடு!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5 இயங்குதளமாக கொண்டுள்ளது.

கேமரா என்று கொண்டால் 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும்  8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

ஆடியோ ஆதரவாக 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ மற்றும் இணைப்பு ஆதரவாக டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1 மற்றும் யு.எஸ்.பி. டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி என்று கொண்டால் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், 9 வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro!

TechNews Tamil

விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாகவுள்ள விவோ ஒய்20 (2021) ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் வெளியானது ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil