ஜியோ அவுட் கோயிங்க் காலுக்கு கட்டணம் அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு நெட்வொர்க்கும் முடிந்த அளவில் சலுகைகளை வாரி இறைத்து வருகிறது.
தற்போது ஏர்டெல் நிறுவனம், தனது பிளான்களை மாற்றி வாடிக்கையாளர்களை கவர முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஏர்டெல் தற்போது ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ரூ. 599 க்கு பல சலுகைகளைக் கொண்ட ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது இந்தத் திட்டம் 2ஜிபி டேட்டாவை வழங்கக் கூடியதாக உள்ளது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இது அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் போன்றவற்றினை வழங்குகிறது.
மேலும் இதனுடன் கூடுதலாக இலவச லைஃப் இன்ஸ்யூரன்ஸையும் வழங்கியுள்ளது.
அதாவது 4 லட்சம் ரூபாய்க்கான காப்பீட்டினை வழங்கியுள்ளது, மேலும் இதற்கு எந்தவிதமான மருத்துவ பரிசோதனைகளும் செய்யத் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது.