Mobile

இந்தியாவில் வெளியான ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. இந்த ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமலாய்டு டிஸ்பிளே, 1,080 x 2,400 பிக்சல் தீர்மானத்தினைக் கொண்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1200 SoC சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியான ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

மேலும் இது ரியல்மி UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

கேமரா என்று கொண்டால் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

மேலும் இந்த ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

பேட்டரி என்று கொள்கையில் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் 50 வாட் சூப்பர் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு என்று கொண்டால் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

ஹூவாய் மேட் 30 ப்ரோ: சினி லென்ஸ் கொண்ட கேமரா அமைப்பு!

TechNews Tamil

ஓப்பன் சேல் விற்பனையில் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் அறிமுகமான Vivo Y11!

TechNews Tamil