Mobile

சீனாவில் அறிமுகமானது ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன்!!

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் என்ற புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ பிளேயர் எடிஷன் ஆனது 6.44 இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் டிஸ்பிளே 1000 + நைட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமானது ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன்!!

இந்த ஸ்மார்ட்போன், 2.84GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் உடன் கூடிய அட்ரினோ 650 ஜி.பி.யுடன் மூன்று எல்பிடிடிஆர் 5 ரேம் வசதி கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்குவதாய் உள்ளது. கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட ஒரு கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா கொண்டுள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸுடன் கூடிய 2 மெகா பிக்சல் கேமராவுடன் டூயல் செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

இது 4200 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. கூடுதலாக ஸ்பீக்கர்களில் டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ கொண்டுள்ளது.

Related posts

விவோ எஸ்1 இந்தியா சேல்: ஆஃப்லைன் விற்பனை தொடங்கியது

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது லெனோவா கே 12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மார்ச் 1 ஆம் தேதி ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil