ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி X50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 13 ஆம் தேதி இந்தியாவில் விற்பனையினைத் துவக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ரியல்மி X50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10ல் ரியல்மி யுஐ உடன் இயங்குவதாக உள்ளது, மேலும் இது 6.44 இன்ச் முழு எச்டி உடன் 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC வசதி கொண்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது அட்ரினோ 650 ஜி.பீ.யு வசதியினைக் கொண்டுள்ளது மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 12 ஜிபி ரேம் வரை இணைக்கப்படுவதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மெமரியினைப் பொறுத்தவரை 128ஜிபி மற்றும் 256ஜிபி யுஎஃப்எஸ் 3.0 வசதியினைக் கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 616 முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இது 4,200 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.