ரியல்மி நிறுவனம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி ரியல்மி எக்ஸ்50 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது முதல்கட்டமாக சீனாவில் அறிமுகம் ஆகும் என்று தெரிகிறது.
இந்த ரியல்மி எக்ஸ்50 5ஜி மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் உடன் அட்ரினோ 620ஜிபியு ஆதரவினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி கேமராயுடன் மொத்தமாக நான்கு கேமராக்களைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மேலும் இது முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாடலானது 6.44 இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி கொண்டு இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.
இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.