Mobile

ஐரோப்பாவில் அறிமுகமானது ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் முதலில் ஸ்பெயினிலும், யூகேவிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது, அதேபோல் ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் மற்றும் ரியல்மி பேண்ட் போன்ற பல சாதனங்களையும் அத்துடன் அறிமுகப்படுத்த உள்ளது.

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவினையும், மேலும் 480 nits Brightness கொண்டதாகவும் மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிமைரி சென்சார், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 8எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 32எம்பி, 8எம்பி டூயல் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் அறிமுகமானது ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாகவும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாகவும் உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4200எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6 802.11,ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, புளூடூத் 5.1 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகத் தயாராக உள்ள விவோ வி17 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விவோ நிறுவனத்தின் எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள ரியல்மி எக்ஸ்2!!

TechNews Tamil