ரியல்மி நிறுவனம் நாளை புதிய ரியல்மி எக்ஸ்2 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
1. ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மாடல் விலை – ரூ.19,999
2. ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மாடல் விலை -ரூ.20,999
இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 2340 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.
இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 9பை உடன் கலர்ஒஎஸ் 6 கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது.
இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு வசதி கொண்டுள்ளது.
மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, டூயல்சிம், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.