Mobile

6ஜிபி ரேம் உடன் அடுத்து அறிமுகமாகவுள்ள ரியல்மி எக்ஸ்2 ப்ரோ!!

ரியல்மி நிறுவனத்தின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு சமீபத்தில் அறிமுகம் ஆனது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் உடன் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ விலை – ரூ27,999 (குத்துமதிப்பான விலை)

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியைக் கொண்டுள்ளது.

6ஜிபி ரேம் உடன் அடுத்து அறிமுகமாகவுள்ள ரியல்மி எக்ஸ்2 ப்ரோ!!

இந்த ஸ்மார்ட்போன் பேனல் டிசி டிம்மிங் 2.0 தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மேலும் இது டால்பி அட்மோஸ் உடனான இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ தொழில்நுட்ப ஆதரவினைக் கொண்டுள்ளது.

இது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64எம்பி கேமரா, 13எம்பி கேமரா, 8எம்பி கேமரா, 2எம்பி கேமரா போன்ற கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ.13,300 விலையில் அறிமுகமானது நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஜியோ அறிமுகப்படுத்தும் ஃபீச்சர் போன்!!

TechNews Tamil

விரைவில் வெளியாக உள்ளது ஒப்போ எஃப்15!!

TechNews Tamil