மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் சீனாவில் ரியல்மி V3 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. இந்த ரியல்மி v3 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இது ரியல்மி v3 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி, 6ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வகை கொண்டதாகவும் உள்ளது.
இந்த ரியல்மி V3 ஸ்மார்ட்போன் ஆனது, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது, மேலும் 6.5 இன்ச் திரை அளவு கொண்டதாகவும் உள்ளது.

மேலும் ரியல்மி V3 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, கேமராவினைப் பொறுத்தவரை பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் 13MP, 2 MP, 2 MP. முன்பக்கத்தில் 8 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
ரியல்மி V3 ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5,000 mAh பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18W சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும், பின்பக்கத்தில் விரல் ரேகை சென்சார் வசதியினையும் கொண்டுள்ளது.