Mobile

சர்வதேச சந்தையில் வெளியாகிய ரியல்மி V15 5G ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் ஸ்மார்ட்போன் ரியல்மி V15 5G ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரியல்மி V15 5G ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி V15 5G ஸ்மார்ட்போன் கிரசண்ட் சில்வர், கோய் மற்றும் மிரர் லேக் ப்ளூ போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இந்த ரியல்மி V15 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் முழு எச்டி பிளஸ் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

சர்வதேச சந்தையில் வெளியாகிய ரியல்மி V15 5G ஸ்மார்ட்போன்!!

மேலும் இது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800U சிப்செட் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 6ஜிபி ரேம் / 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டதாகவும் உள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை அண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டதாகவும், மேலும் கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் நானோ சிம் 5 ஜி 4 ஜி எல்டிஇ வைஃபை 802.11ac புளூடூத் வி 5.1 ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் டிராக் எச்டி சவுண்ட் சப்போர்ட் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும், மேலும் 4310 எம்ஏஎச் பேட்டரியினைக் கொண்டுள்ளது.

Related posts

ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸின் விலைப்பட்டியல் இதோ!!

TechNews Tamil

சுழலும் திரையுடன் எல்ஜி விங் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது Nokia 6.2!

TechNews Tamil