மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரியல்மி கியூ 2 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி கியூ 2 ஸ்மார்ட்போன் ஆனது RMX2117 என்ற மாடல் எண் கொண்டதாகவும், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் வசதி கொண்டுள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா கொண்டதாகவும் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டதாக உள்ளது.
மேலும் இது பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.