Mobile

செப்டம்பர் 5 முதல் ரியல்மி க்யூ-சீரிஸ்!

ரியல்மி  அதன் ரியல்மி க்யூ-சீரிஸ் ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரியல்மி க்யூ தொடரின் கீழ் மொத்தம் நான்கு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் ஆகும். 

முதலில் ரியல்மி அதன் வெய்போ பக்கத்தின் வழியாக அதன் க்யூ தொடரில் ஸ்னாப்டிராகன் 712 SoC-ஐ கொண்டுள்ளதாக தெரிவித்தது. மேலும் இந்த தொடரில் 48 மெகாபிக்சல் அளவிலான சோனி சென்சாரின் இருப்பை உறுதி செய்தது. அது ஒரு சோனி IMX586 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

செப்டம்பர் 5 முதல் ரியல்மி க்யூ-சீரிஸ்!

ரியல்மி நிறுவனத்தின் முதல் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி எக்ஸ்டி பற்றிய தகவல்களும் வெளியாகி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த ரியல்மி எக்ஸ்டி இந்தியாவில் அறிமுகமான பின்னரே செப்டம்பர் மாதத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. 


ரியல்மே எக்ஸ்டி ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்களை பொறுத்தவரை, அது 6.4 அங்குல சூப்பர் அமோலேட் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே, முன்பக்க கேமராவுக்கு இடமளிக்கும் வகையிலான வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு, அட்ரினோ 616 ஜி.பீ உடனான க்வால்காம் ஸ்னாப்டிராகன் 712 செயலி போன்ற அம்சங்களை கொண்டிருக்கலாம். 

Related posts

ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள வாய்ஸ் சர்ச்!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமானது ரியல்மி வி 5 5 ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil