Mobile

மலேசியாவில் வெளியான ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 1080 x 2400 பிக்சல் தீர்மானத்துடன் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஒசி சிப்செட் கொண்டுள்ளது.

மலேசியாவில் வெளியான ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன்!

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த realme UI 2.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் மெமரி அளவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி B&W போர்ட்ராய்ட் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா வசதி கொண்டுள்ளது.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக புளூடூத் 5, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் வெளியான ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

ஹானர் 9X மற்றும் 9X ப்ரோ உடன் பட்ஜெட் Smart TV அறிமுகம்!

TechNews Tamil

ஒருவழியாக வெளியானது கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன்… படுகுஷியில் பயனர்கள்!!

TechNews Tamil