மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன், 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி கொண்டுள்ளது.
மேலும் இது ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் அது ஆண்ட்ராய்டு 11 சார்ந்த realme UI 2.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மெமரி அளவு என்று கொண்டால் ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.
கேமரா என்று கொண்டால் இது 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி மோனோக்ரோம் போர்ட்ரேய்ட் லென்ஸ், 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.
பேட்டரி என்று கொள்ளும்போது ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவு என்று கொள்கையில் 5g, 4G LTE, புளூடூத் 5, வைஃபை 802.11, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.