Mobile

சீனாவில் அறிமுகம் செய்துள்ள ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் சீனாவில் நார்சோ 20 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. இந்த ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ ஸ்கிரீன் கொண்டதாகவும், மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகம் செய்துள்ள ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி LPPDDR4x ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி eMMC 5.1மெமரி கொண்டுள்ளது, மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டுள்ளது, கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை  3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

மேலும் இது 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 65 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,499 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Related posts

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது அசத்தலான அம்சங்களுடன் Vivo iQoo Neo 855!

TechNews Tamil

ரூ.2000 வரை விலைகுறைப்பு செய்யப்பட்ட iQOO 3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil