ரியல்மி நார்சோ 10A ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ரியல்மி நர்சோ 10A ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி நார்சோ 10A ஸ்மார்ட்போன் இரட்டை சிம் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் நர்சோ 10A ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல எச்டி உடன் 720×1,600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 70 SoC கொண்டுள்ளது, மெமரியினைப் பொறுத்தவரை இது 4ஜிபி ரேம் வசதி கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் போன்றவற்றினையும் கொண்டுள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொண்டுள்ளது.
மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டு விரிவாக்கக் கூடியதாக உள்ளது. இந்த போன் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்டு வசதி கொண்டதாகவும் உள்ளது. மேலும் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.