ரியல்மி நிறுவனம் தற்போதுஅதன் 55-இன்ச் எஸ்எல்இடி 4கே டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி ஸ்மார்ட் டிவி 55 இன்ச் ஸ்மார்ட் டிவியினைக் கொண்டதாகவும், மேலும் உலகின் முதல் SLED 4K ஸ்மார்ட் டிவியாக உருவாகியுள்ளது.
ரியல்மி 55 இன்ச் எஸ்எல்இடி 4கே டிவி ஆனது என்.டி.எஸ்.சி வண்ண வரம்பு மற்றும் டி.யூ.வி ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ் கொண்டுள்ளது.

ரியல்மி 55-இன்ச் எஸ்எல்இடி டிவி மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர் வசதி உடன் கார்டெக்ஸ்-ஏ54சிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது மாலி-470எம்பி ஜிபியு ஆதரவினைக் கொண்டதாகவும், மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் எச்டிஆர் 10+ஆதரவினைக் கொண்டதாகவும், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
மேலும் 2.4GHz மற்றும் 5GHz Wi-Fi, புளூடூத் 5.0, HDMI போர்ட்கள், USB போர்ட் போன்றவற்றினை இணைப்பு ஆதரவுகளாகக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி 24வாட் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் டால்பி ஆடியோ வசதியினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி அனைத்து மெட்டல் நிலைப்பாட்டையும் பயன்படுத்துவதாகவும், ஆயுள் மற்றும் பிரீமியம் தோற்றத்தை வழங்குவதாகவும் உள்ளது.