சீனாவில் ரியல்மி நிறுவனம் ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. இந்த ரியல்மி எக்ஸ் 7ஸ்மார்ட்போனின் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் ஆனது 6.43 இன்ச் 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800U பிராசஸர் கொண்டுள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் ரெட்ரோ போர்ட்ரெய்ட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 32 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் ஆடியோ வசதியினைப் பொறுத்தரை லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ டூயல் 4 ஜி வோல்டிஇ வைஃபை 6 802.11ax புளூடூத் 5 ஜிபிஎஸ் (எல் 1 + எல் 5) / க்ளோனாஸ் என்எப்சி யூ.எஸ்.பி டைப்-சி கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 65W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் மற்றும் 4300 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.