Mobile

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43 இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே, 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 120Hz refresh rate போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இயங்குதளம் எனக் கொண்டால் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

கேமராவினைப் பொறுத்தவரை ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினையும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சமாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட கொண்டுள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அட்டகாசமான விலையில் நேற்று வெளியான ஒப்போ K3

TechNews Tamil

அறிமுகமானது எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 22 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil