Mobile

இந்தோனேசியாவில் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி15 Holiday எடிஷன் அறிமுகம்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் ரியல்மி சி15 Holiday எடிஷனை இந்தோனேசியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி சி15 Holiday எடிஷன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 420nits பிரைட்நஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தோனேசியாவில் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி15 Holiday எடிஷன் அறிமுகம்!

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாகவும் Realme UI 1.0 ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ரியல்மி சி15 Holiday எடிஷன் மாடல் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டதாகவும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

ரியல்மி சி15 Holiday எடிஷன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் கேமரா மற்றும் 2எம்பி கேமரா, 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதியினையும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது டெக்னோ பூவா ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

5 ஜி ஆதரவுடன் அறிமுகமானது IQ Z1X ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் அசத்தலான அம்சங்களுடன் ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil