ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் புதிய ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2.3GHz ஆக்டா கோர் கிரையோ 465 CPU, ஒரு அட்ரினோ 618 GPU மற்றும் 6GB அல்லது 8GB RAM போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது, ஃபுல்ஹெச்.டி மற்றும் ரெசல்யூஷனையும் கொண்டுள்ளது, இது இரண்டு செல்ஃபி கேமராக்களைக் கொண்டதாக உள்ளது. மேலும் 16MP f / 2.0 சோனி IMX471 தொகுதி மற்றும் 105 டிகிரி பார்வையுடன் 8MP அல்ட்ராவைடு ஸ்னாப்பர் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64 எம்.பி கேமராவுடன் 12 எம்.பி எஃப் / 2.5 டெலிஃபோட்டோ ஷூட்டர், 8 எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் ஸ்னாப்பர் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
ரியல்மே 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 4,300 எம்ஏஎச் பேட்டரி வசதியினைக் கொண்டுள்ளது. ரியல்மி 6 ப்ரோ 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் 6 ஜிபி ரேம் வசதியும் கொண்டுள்ளது.