Mobile

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் இது 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் கார்னிங் கொரில்லா பாதுகாப்பு வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 662 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் ஆணட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி சென்சார் போன்றவற்றையும், முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

Related posts

ஒப்போ நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ள ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பிப்ரவரியில் அறிமுகமாகவுள்ள ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஐந்தாவது ஆண்டு விழா: ரெட்மி ஸ்மார்ட்போன், டிவிக்கு விலை குறைப்பு!

TechNews Tamil