Mobile

சிறப்பான அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே, 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது.

மேலும் இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

சிறப்பான அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்!

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

மேலும் இது 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக் கொண்டுள்ளது.

இது 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

Related posts

நாளை இந்தியாவில் வெளியாகவுள்ள ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

தென் கொரியாவில் களம் இறங்கியது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

போட்டோகிராபி பிரியர்களுக்காக அறிமுகமாகவுள்ள புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் !!

TechNews Tamil