Mobile

புதிய அப்டேட்டுடன் களம் இறங்கியுள்ள ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் கடந்தமாதம் ரியல்மி சி3 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ரியல்மி சி3 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

1.    3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை- ரூ.6,999

2.    4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை- ரூ.7,999

அதாவது இந்த புதிய அப்டேட்டில் பிழை திருத்தங்கள் பல செய்யப்பட்டுள்ளது, மேலும் கேமரா ரீதியான பல மேம்பாடுகளையும் வழங்கியுள்ளது.

புதிய அப்டேட்டுடன் களம் இறங்கியுள்ள ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!!

புதுப்பிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது பதிப்பு எண் RMX2020_11_A.15 கொண்டு உள்ளது. கேமராரீதியாக கேமரா மாதிரிக்காட்சி தெளிவு மற்றும் உருவப்பட பயன்முறையை மேம்படுத்துவதாய் உள்ளது.

ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 12என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி சென்சார் என்ற இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது, மேலும் இது 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2.4ஜிகாஹெர்ட்ஸ், வைஃபை, யுஎஸ்பி-ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வோல்ட்இ, புளூடூத் 5, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.

Related posts

Samsung Galaxy M30s ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 வரை விலைக்குறைப்பு!!

TechNews Tamil

அறிமுகமானது கேலக்ஸி எம்30எஸ் மற்றும் கேலக்ஸி எம்10எஸ்!

TechNews Tamil

லாவா இசட் 93 :ரூ. 8000 விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil