Mobile

பட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி சி3 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

1.    3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.6,999

2.    4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.7,999

இந்த ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 14 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!

ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 12என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி சென்சார் என்ற இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது, மேலும் இது 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2.4ஜிகாஹெர்ட்ஸ், வைஃபை, யுஎஸ்பி-ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வோல்ட்இ, புளூடூத் 5, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.

Related posts

அறிமுகமானது Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil

அதிரடியாக களமிறங்கிய விவோ எக்ஸ்30 ப்ரோ

TechNews Tamil

ரூ.35,999யில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்5இ.!

TechNews Tamil