Mobile

ரூ.3,069 விலையில் அறிமுகமான ரியல்மி சி2எஸ் ஸ்மார்ட்போன்!

ரியல்மி நிறுவனம் இன்று தாய்லாந்தில் ரியல்மி சி2எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

  1. ரியல்மி சி2எஸ் ஸ்மார்ட்போனின் விலை – ரூ.3,069

ரியல்மி சி2எஸ் ஸ்மார்ட்போன் 6.1 இனச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1560 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் பி22 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

ரூ.3,069 விலையில் அறிமுகமான ரியல்மி சி2எஸ் ஸ்மார்ட்போன்!

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி செகன்டரி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.

ரியல்மி சி2எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, புளூடூத்,வைஃபை, இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ப்ளேஸிங் ப்ளூ வண்ணத்தில் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Xiaomi Redmi 8A: செப்டம்பர் 29ம் தேதியில் விற்பனை ஆரம்பம்!!

TechNews Tamil

விற்பனையினைத் துவக்கி உள்ள ரியல்மி 5ஐ!!

TechNews Tamil