மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது, இந்த ரியல்மி சி25 எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி சி25 எஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.
மேலும் இது மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி மூலம் இயங்குவதாக உள்ளது. ரியல்மி சி25 எஸ் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் மெமரி விரிவாக்க ஆதரவினைக் கொண்டுள்ளது.
பேட்டரி என்று கொண்டால் ரியல்மி சி25 எஸ் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்டுள்ளது.
மேலும் இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயங்குவதாக உள்ளது. பாதுகாப்பு அம்சம் என்று கொள்கையில் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது.
கேமரா என்று கொள்ளும்போது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக இரட்டை சிம் ஆதரவு, 4ஜி வோல்ட்இ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11, ப்ளூடூத் 5.0 கொண்டுள்ளது.