Mobile

மார்ச் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள ரியல்மி சி21 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி சி21 ஸ்மார்ட்போனை மார்ச் 5 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் குறித்து ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதத்தினைக் கொண்டதாக இருக்கலாம்.

இது மெமரி அளவு எனக் கொண்டால் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம்.

மார்ச் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள ரியல்மி சி21 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதி கொண்டதாக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம்.

ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம். இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாக இருக்கலாம்.

ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் பாதுகாப்பு அம்சமாக கைரேகை சென்சார் கொண்டதாகவும், இணைப்பு ஆதரவாக புளூடூத் 5, வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டதாக இருக்கலாம்.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியான இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

நாளை சீனாவில் களம் இறங்குகின்றது ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

399 ரூபாய்க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே.!

TechNews Tamil