ரியல்மி நிறுவனம் C17 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ரியல்மி நிறுவனம் C17 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ரியல்மி நிறுவனம் C17 என்ற ஸ்மார்ட்போன் செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ரியல்மி C17 ஸ்மார்ட்போன் ஆனது, 6.5 இன்ச் அளவிலான ஹோல் பஞ்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, இது 90Hz ரெவ்ரெஷ் ரேட் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் குவால்காம் ஸ்நாப்டிராகன் 460 பிராசசர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் அட்ரீனோ 610 GPU வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 13 மெகா பிக்சலுடன் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சலுடன் கூடிய 119 டிகிரி வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகா பிக்சல் மோனோகுரோம் கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது லேக் கிரீன், நேவி ப்ளூ ஆகிய நிறங்களில் வெளியாகவுள்ளது. மேலும் விரல் ரேகை சென்சார், பேட்டரி சக்தியினைக் கொண்டுள்ளது.