Mobile

சர்வதேச சந்தையில் அறிமுகம் ஆகியுள்ள ரியல்மி சி17 ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் ரியல்மி சி17 ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி சி17 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 720×1,600 பிக்சல் திர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

ரியல்மி சி17 ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 460எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 610ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் அறிமுகம் ஆகியுள்ள ரியல்மி சி17 ஸ்மார்ட்போன்!

மெமரி அளவினைப் பொறுத்தவரை ரியல்மி சி17 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா,  8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா 10 2எம்பி சென்சார் கொண்டதாகவும், மேலும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எல்.டி.இ, வைஃபை, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ் / ஏ-ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

மலேசியாவில் ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள ரெட்மி நிறுவனம்!!

TechNews Tamil

அறிமுகமானது மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் வெளியீட்டிற்குத் தயாராகிவரும் மோட்டோரோலா ஐபிஜா 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil