Mobile

இந்தோனேஷியாவில் அறிமுகமாகவுள்ள ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் ரியல்மி சி15 என்ற ஸ்மார்ட்போனை ஜூலை 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் ஆனது இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மற்ற நாடுகளில் அதன்பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வானது நேரடி நிகழ்வாக அல்லாமல் நிறுவனத்தின் வலைதள பக்கத்திலும் மேலும் இந்தோனேசிய சமூக வலைதளப் பக்கத்திலும் ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் அறிமுகமாகவுள்ள ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன்,  சீகல் கிரே மற்றும் மெரைன் ப்ளூ என்ற இரண்டு வண்ணங்களில் வெளிவர உள்ளதாகவும் கூறப்படுகின்றது. கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பினைக் கொண்டதாக உள்ளது, மேலும் முன்பக்கத்தில் மினி டிராப் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி 6 ஐ ஸ்மார்ட்போன்களை இந்தியா, சீனா, மலேசியா போன்ற நாடுகளில் வெளியிடுவதற்கான அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது.

Related posts

விற்பனையைத் தொடங்கிய Nubia Red Magic 3S!

TechNews Tamil

Asus போன்களுக்கு ரூபாய் 7000 வரை விலைக்குறைப்பு!

TechNews Tamil

அறிமுகமானது ஹூவாய் என்ஜாய் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil