Mobile

ஆன்லைன் வெளியீடாக அறிமுகமானது ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் ரியல்மி சி15 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியிட்டு நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியது.

ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல திரை அளவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு எஸ்டி கார்டு என 3 கார்டு கொண்ட ஸ்லாட்டினை 256 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

மேலும் சி 15 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் செயலி கொண்டு இயங்குவதாகவும், மேலும் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

ஆன்லைன் வெளியீடாக அறிமுகமானது ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்!!

இந்த ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் ஆனது 3 + 32 ஜிபி மற்றும் 4 + 64 ஜிபி என இரண்டு மெமரி அளவுகளைக் கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 13 எம்பி பிரைமரி லென்ஸ், 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி மற்றும் 2 எம்.பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் விற்பனையானது ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம்12:00 மணிக்கு ரியல்மி மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகின்றது.

Related posts

5ஜி ஐபோன் திட்டமிட்டபடி வெளியாகும்… ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தகவல்!!

TechNews Tamil

விரைவில் வெளியாகவுள்ள IQOO 7 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள ரூ. 2,00,000 மதிப்பிலான சியோமி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil