Mobile

இந்தோனேஷியாவில் அறிமுகமானது ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி சி15 என்ற ஸ்மார்ட்போன் இந்தோனேஷியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி சி11 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வெளிவந்துள்ளது. ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி + எல்சிடி டிஸ்ப்ளேவினையும் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது மீடியாடெக் ஹீலியோ ஜி 35 செயலி மூலம் இயங்குவதாக உள்ளது.

ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன், பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டதாகவும்,  மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் 256 ஜிபி வரை நீட்டிக்கக்கூடியதாகவும் உள்ளது.

இந்தோனேஷியாவில் அறிமுகமானது ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்!!

இதன் கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 மெகாபிக்சல்கள் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா-வைட், 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ, 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் போன்றவற்றினையும், முன்புறத்தில் செல்பிக்கென 5 மெகாபிக்சல் கேமராவினையும் கொண்டு உள்ளது.

மேலும் இந்த ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாகவும் உள்ளது. மேலும் இது, 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4 ஜி வோல்ட் இ, வைபை, ப்ளுடூத் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் வசதியினையும் கொண்டு உள்ளது.

Related posts

மலிவு விலையில் அறிமுகமான நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ. 82,125 ரூபாயில் ஹூவாய் பி40 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நாளை அறிமுகமாகிறது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil