Mobile

மலேசியாவில் ஜூன் 30 ஆம் தேதி அறிமுகமாகிறது ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் மலேசியாவில் ஜூன் 30 ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு காலை 8:30 மணிக்கு ரியல்மி சி 11 ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலை இப்போது பார்க்கலாம். இந்த ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் ஆனது புதிய ஆக்டோ கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 எஸ்ஓசி கொண்டு இயங்கும் என்று தெரிகிறது.

கேமரா குறித்த தகவலின்படி ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் 13 எம்பி மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமராவோடு இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டதாகவும், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு இருக்கும் என்று தெரிகிறது.

மலேசியாவில் ஜூன் 30 ஆம் தேதி அறிமுகமாகிறது ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன்!!

ரியல்ம் சி 11 ஸ்மார்ட்போன்  ஆக்டா-கோர் செயலி 2.nGHz, கோர்டெக்ஸ் A53 CPU உடன் இயங்கும் என்று தெரிகிறது. மேலும் ரியல்மி சி11 6.5 அங்குல மினி டிராப் டிஸ்ப்ளேவினையும், இரட்டை சிம் கார்ட் வசதிகளையும் கொண்டு இருக்கலாம்.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 32 ஜிபி உள்ளடக்கப்பட்ட சேமிப்பு வசதி மெமரி விரிவாக்கக் கூடிய வசதியுடன் மைக்ரோ எஸ்டி கார்ட் பொருத்தும் வசதி, 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கப்பட்ட சேமிப்பு வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்கும் தன்மை கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related posts

இன்றுமுதல் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6!

TechNews Tamil

லீக்கானது Samsung Galaxy A51 ஸ்மார்ட்போனின் விவரங்கள்!!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil