மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் இந்தியாவில் C11 2021 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ரியல்மி C11 2021 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி C11 2021 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1.6GHz ஆக்டாகோர் யுனிசாக் SC9863A பிராசஸர், IMG8322 GPU வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி என்று கொண்டால் 2 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி eMMC 5.1 மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.
இயங்குதளம் என்று பார்க்கையில் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி யு.ஐ. கோ எடிஷன் கொண்டு இயங்குவதாக உள்ளது.
கேமரா என்று கொண்டால் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா கொண்டதாக உள்ளது. மேலும் ஆடியோ வசதியாக 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.
பேட்டரி அளவு என்று கொண்டால் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.