மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் ரியல்மி புக் பிரைம் லேப்டாப்பை தற்போது இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
ரியல்மி புக் பிரைம் லேப்டாப் 14.2 இன்ச் 2கே எல்சிடி டிஸ்பிளே வசதி, 3:2 திரைவிகிதம் கொண்டுள்ளது.
ரியல்மி புக் பிரைம் லேப்டாப் 11வது ஜெனரல் இன்டெல் கோர் i5-11320H பிராசஸர் வசதி கொண்டுள்ளது.
மெமரி அளவாக கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா லேப்டாப் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

ஆடியோ ஆதரவாக டிடிஎஸ் ஆடியோ தொழில்நுட்பம் கொண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வசதியுடன் கொண்டுள்ளது.
பேட்டரி அளவாக 54Wh பேட்டரி ஆதரவைக் கொண்டதாகவும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் கொண்டுள்ளது. மேலும் இது 12 மணி நேரம் பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக வைஃபை 6, புளூடூத் 5.2, டைப்-சி, டைப்-ஏ போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஸ்லாட் கொண்டுள்ளது.