Mobile

ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் உலக சந்தையில் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனினை ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 2400 ×1080 பிக்சல் தீர்மானத்துடன் FHD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த  ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது  800MHz மாலி-G76 3EEMC4 GPU வசதியினைக் கொண்டுள்ளது.

ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த  ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் 4 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி கொண்டதாகவும், மேலும்  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டும் உள்ளது.

இந்த  ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்,  2 எம்பி மோனோ சென்சார், 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது,  பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை  3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், எஃப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 4300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Related posts

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் !!

TechNews Tamil

நைஜீரியாவில் டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

பயனர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் களம் இறங்கிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil