ரியல்மீ 5 இன் அசர வைக்கும் அம்சங்கள்!
Mobile

ரியல்மீ 5 இன் அசர வைக்கும் அம்சங்கள்!

ரியல்மீ 5 ஸ்மார்ட்போன்கள், புது டெல்லியில் நேற்று அறிமுகமானது. நான்கு கேமராக்களைக் கொண்ட இந்த ரியல்மீ 5 ஸ்மார்ட்போன், 10,000 ரூபாய் என்பதால் மக்களும் முதல் நாளான நேற்றே வாங்குவதை துவங்கிவிட்டனர்.

ரியல்மீ 5 ஸ்மார்ட்போன், 3 வகையாக அறிமுகமாகியுள்ளது.  3GB RAM/ 32GB சேமிப்பு வகை 9,999 ரூபாயிலும், 4GB RAM/ 64GB என்ற மெமரியைக் கொண்டு 10,999 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM/ 128GB என்ற மெமரியைக் கொண்டு 11,999 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.

ரியல்மீ 5 இன் அசர வைக்கும் அம்சங்கள்!

ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 27 அன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது. 4 பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 119-டிகிரி வரை விரிந்த புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான போர்ட்ரைட் கேமரா ஆகிய கேமராக்களை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் நானோ சிம் வசதி கொண்ட Color OS 6.0-யை அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பம்சத்தால் இது ப்ளிப் கார்ட்டில் விறுவிறுப்பாக விற்பனை ஆகி வருகிறது.

Related posts

விரைவில் களம் இறங்கத் தயாராகி வரும் ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இரண்டாக மடிக்கக்கூடிய மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

மலிவு விலையில் வரவுள்ள Huawei Enjoy 10S!

TechNews Tamil