Mobile

ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ரியல்மி 5ஐ!!

ரியல்மி நிறுவனம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி புதிய ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1.    ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் – ரூ.8,999

ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ரியல்மி 5ஐ!!

மேலும் சிறப்பு அம்சமாக வாட்டர் டிராப் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

 மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்போன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 1000 விலைகுறைப்பு!!

TechNews Tamil

அறிமுகமானது மலிவு விலை மோட்டோ டி.வி.க்கள்!!

TechNews Tamil

பயனர்களைக் கவரும் அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil