ரியல்மி 5 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, மலிவான விலை மற்றும் அதிக அளவிலான தொழில்நுட்ப வசதிகளின் காரணமாக மிகச் சிறப்பான வரவேற்பினைப் பெற்றது.
அத்துடன் முதற்கட்ட ‘ப்ளாஷ் சேல்’ விற்பனையின்போது சுமார் 1,20,000 போன்கள் விற்பனையானது அதன் வரவேற்பினை நிரூபிக்கும்படியாக இருந்தது.

3 ஜிபி, 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.9,999 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் உடனான போன் ரூ.10,999 4ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.11,999 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ்3+ போன்றவற்றையும் கொண்டுள்ளது.
ஆன்லைன் விற்பனையினைப் பொறுத்தவரையில், இந்த ரியல்மி 5 ஸ்மார்ட்போன் வாரம் ஒருமுறையாக செவ்வாய் கிழமை தோறும் மதியம் 12 மணிக்கு ரியல்மி தளம் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் கிடைக்கப் பெறும். ரியல்மி 5 போன் நேற்று முதல் ஸ்டோர் விற்பனைக்கும் வந்துள்ளது.