சமீபத்தில் மலேசியாவில் அறிமுகம் ஆன ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் அடுத்த வார இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது, இந்த ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் உடன் IMG PowerVR GE8320 GPU வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது.
ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது, மேலும் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்ட்இ, புளூடூத் 5, வைஃபை, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், டூயல் சிம் மற்றும் ஜி.பி.எஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.