ரியல்மி நிறுவனம் முதல் முறையாக ஸ்மார்ட்வாட்ச் தயாரிக்கும் சேவையில் களம் இறங்கியுள்ளது, அந்தவகையில் ரியல்மி நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ரியல்மி வாட்ச் ஆனது 1.4 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவினையும், 2.5 டி வளைந்த கண்ணாடியினையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் 12 வாட்ச் முகங்களைக் கொண்டதாக உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்களுக்கு அந்த சார்ஜ் நிற்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த வாட்ச் ஆனது இதய துடிப்பு சென்சாரினைக் கொண்டுள்ளது. இந்த வாட்ச் 14 வகையான விளையாட்டு முறைகளையும், பலவகையான விளையாட்டு கண்காணிப்பு முறைகளையும் கொண்டுள்ளது.
இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவைக் கணக்கிட SpO2 சென்சார் உள்ளது. இது வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் சமூக வலைதளங்களின் நோட்டிபிகேஷன் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் இதனை கேமரா ரிமோட் ஷட்டர்போல் உபயோகிக்க முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் ரியல்மி இணைப்பு செயலியைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனுடன் இணைத்து கால்களை செய்ய முடியும்.