Mobile

விற்பனையை துவங்கிய ரியல்மீ 5!!

கடந்த வாரம் அறிமுகமான ரியல்மீ 5 ஸ்மார்ட்போன், இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மீ 5 ஸ்மார்ட்போன், 3 வகைகளில் அறிமுகமாகியுள்ளது.  3GB RAM/ 32GB சேமிப்பு வகை 9,999 ரூபாயிலும், 4GB RAM/ 64GB சேமிப்பு வகை 10,999 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM/ 128GB சேமிப்பு வகை 11,999 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் நானோ சிம் வசதி கொண்ட Color OS 6.0-யை அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது.

விற்பனையை துவங்கிய ரியல்மீ 5!!

 6.5-இன்ச் full-HD+ (720×1600 பிக்சல்கள்) திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகவுள்ளது. 

4 பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 119-டிகிரி வரை புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான போர்ட்ரைட் கேமரா ஆகிய கேமராக்களை கொண்டுள்ளது.

ரியல்மீ 5 Pro ஸ்மர்ர்ட்போன் 4G VoLTE, வை-பை 802.11ac, ப்ளூடூத் v5.0, a GPS/ A-GPS, 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் USB டைப்-C சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. 

Related posts

அடுத்த மாதம் ColorOS 7 அப்டேட் கொண்டு வரக்கூடிய Realme X2 Pro!

TechNews Tamil

போகோ ஸ்மார்ட்போனுக்கு 2 ஆயிரம் முதல் 8 ஆயிரம்வரை தள்ளுபடி!

TechNews Tamil

ஐரோப்பாவில் அறிமுகமானது மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil