ரியல்மீ நிறுவனம் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை தீபாவளிக்கு முன்னதாக இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.
ரியல்மீ நிறுவனம், நான்கு கேமரா கொண்ட தனது புதிய ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது, இதை உறுதி செய்வதற்காக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது தளத்தில் ஒரு பிரத்யேக பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மீ நிறுவனத்தில் இந்த புதிய ரியல்மீ 5-சீரிஸ் ஸ்மார்ட்போன், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டிருக்கும் என அந்த நிறுவனம் சமீபத்தில் டீஸர் வெளியிட்டிருந்தது.
ரியல்மீ 5-சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஃப்ளிப்கார்ட்டில் செய்யப்படவுள்ளது..

ஃப்ளிப்கார்ட் கூடுதலாக இந்த ஸ்மார்ட்பொனிற்கு டீஸர் வீடியோவை வெளியிட்டுள்ளது, இந்த டீஸர் வரவிருக்கும் ரியல்மீ ஸ்மார்ட்போனின் பின்புறத்தைக் காட்டுகிறது – குறிப்பாக நான்கு பின்புற கேமரா அமைப்பு, எல்இடி ஃபிளாஷ் ஆகியவை.
கடந்த வாரம், ரியல்மீ நிறுவனம் தனது 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை தீபாவளிக்கு முன்னதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது.
சாம்சங் ஐசோசெல் பிரைட் ஜி.டபிள்யூ 1 பட சென்சாரைப் பயன்படுத்தியதாகவும் நிறுவனம் அறிவித்தது. சாம்சங் மற்றும் சியோமி ஆகியவை தங்கள் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன்களில் இதே சென்சாரைத்தான் பயன்படுத்துகிறது.