Realme XT ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் சென்சார் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.
தற்போது இதுகுறித்து கிடைத்த தகவலின்படி ரியல்மீ Realme XT இந்தியாவில் செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது என்பது தெளிவாகிறது.
Realme XT ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 SoC ப்ராசஸர், 8GB அளவு வரையிலான RAM, 128GB வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.

மேலும் வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் AMOLED திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
முன் மற்றும் பின் என இரண்டு புறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்டிராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மென்பொருளை பொருத்தவரை ஆண்ட்ராய்ட் 9 பையை மையப்படுத்தி ColorOS 6 அமைப்பை கொண்டு இயங்குகிறது.
Realme XT ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முக்கியமாக, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா என அமைந்துள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கூடவே, 4,000mAh பேட்டரி, 20W VOOC 3.0 விரைவு சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டைப்-C சார்ஜர் போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.