Realme XT ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகியது.
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 SoC ப்ராசஸரைக் கொண்டு இயங்கக்கூடியது.
மெமரி:
மெமரியினைப் பொறுத்தவரை 8GB அளவு வரையிலான RAM, 128GB வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

கேமரா:
கேமராக்களை பொறுத்தவரை இந்த Realme XT ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
அதில், 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா போன்றவையும் உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவும் உள்ளது.
மற்ற அம்சங்கள்:
பேட்டரியினைப் பொருத்தவரை 4,000mAh பேட்டரியினைக் கொண்டுள்ளது. வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்தினைக் கொண்டுள்ளது, இதனுடன் 6.4-இன்ச் AMOLED திரையும் அடக்கம்.
மேலும் இது ஸ்னேப்டிராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு இயங்குகிறது. சாஃப்ட்வேர் ரீதியாக, ஆண்ட்ராய்ட் 9 பையுடன் ColorOS 6 அமைப்பை கொண்டு செயல்படக்கூடியது.