Realme XT 730ஜி ஸ்மார்ட்போன் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் சமீபத்தில் அறிமுகமான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும்.
இந்த Realme XT 730ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம், 64 ஜி.பி., 128 ஜி.பி. மெமரி வகைகளில் வெளியாகிறது.
இந்த ஸ்மார்ட்போன், ColorOS 6.1 உடன் Android 9 Pie கொண்டு இயங்கும் தன்மையானது. இது 6. 4 இஞ்ச் full-HD உடன் 2340×1080பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இது Super AMOLED Fluid டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இது octa core Qualcomm Snapdragon 730ஜி பிராசஸர் உடன் SoC கொண்டு இயங்கும் தன்மையானது.
கேமரா:
இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது.
8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் போன்றவைகளைக் கொண்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.
4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 போன்றவைகளும் இதில் உள்ளது. இது 50W SuperVOOC Flash Charge ஆதரவு கொண்டுள்ளது, இது 4,000mAh பேட்டரியை கொண்டதாக உள்ளது.