ரியல்மி நிறுவனத்தின் Realme X50 pro 5G ஸ்மார்ட் போன் கடந்த வாரம் பார்சிலோனாவில் நடைபெறவிருந்த MWC 2020 நிகழ்ச்சியில் வெளியாக இருந்தது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த விழாவானது ரத்து செய்யப்பட்டதால், வெளியாக இருந்த Realme X50 pro 5G ஸ்மார்ட் போன் ஆன்லைன் மூலம் உலகளவில் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது, ரியல்மி எக்ஸ்50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.57 இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865ஜி சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 32 எம்பி டூயல் செல்பீ கேமரா கொண்டதாக உள்ளது.
இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, புளூடூத் 5இ ஜிபிஎஸ்,என்எப்சி,யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.