Realme X2 ஸ்மார்ட்போனின் டீசரைப் பார்த்தபின்னர், பலருடைய எதிர்பார்ப்பு அதன் அறிமுகம் குறித்ததாகவே இருந்து வந்தது. சீனாவில் சமீபத்தில் அறிமுகமாகி அதிக வரவேற்பினைப் பெற்றது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதத்தில் Realme XT 730G என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகமாகும் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது இதுகுறித்த சிறப்பான விற்பனையை துவங்கியுள்ளது ரியல்மீ நிறுவனம்.

இந்த Realme X2 போன் ஆனது Realme X சீரியசின் மேம்படுத்தப்பட்ட அம்சமாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
Realme X2 முழு-எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் அடங்கும்.
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
இதில் மேம்பட்ட அம்சமாக இருப்பவைகளில் ஒன்று, VOOC 4.0 ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம்
ஆகும், இது வேகமான சார்ஜிங் செய்யும்
திறன் கொண்டதாகத் தெரிகிறது.
தற்போது இதன் விற்பனை சீனாவில் தொடங்கியுள்ளது, அதாவது Realme X2 இன் விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது
- 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு கொண்ட வகை- ரூ .15,900
- 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு கொண்ட வகை- சுமார் ரூ .18,900
செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 26 வரையிலான காலகட்டத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,000 தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிகிறது.